இந்திய – இலங்கை பயணிகள் படகு சேவை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள், நாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் முனையத்தின் கரையோர உள்கட்டமைப்பை வணிகமயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த முனையத்தை இயக்கும் தமிழ்நாடு கடல்சார் திணைக்களம் , அங்கு பிரத்யேக ‘வரி விலக்கு கடை’ மற்றும் ‘அந்நிய செலாவணி’ வசதிகளை ஏற்படுத்துவதற்காக இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.
அத்துடன், ஓகஸ்ட் 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகு சேவை மூலம் இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
இந்நிலையில்,சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களிடையே இந்த வழித்தடத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இதனை வணிகச் சூழல் நிறைந்த ஒரு சர்வதேச பயணிகள் நுழைவாயிலாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
