பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஜூலை 3 முதல் ஜூலை 5 வரை ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றார்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி இன்று (02) வியாழக்கிழமை மேற்படி தகவலை உறுதிப்படுத்தினார்.
“பிரதமர் தனது ஈரான் பயணத்தின் போது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்.
பிரதமருடன் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோரும் செல்கின்றனர்.” எனவும் அவர் கூறினார்.
“துயரத்தின் இந்த வேளையில் சகோதரத்துவ நாட்டிற்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், பாகிஸ்தான் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் சார்பாக ஈரானிய தலைமைக்கும், மறைந்த தலைவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தனது இரங்கலைத் தெரிவிப்பார்” என்று தாஹிர் ஆண்ட்ராபி மேலும் கூறினார்.
மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான வடகிழக்கு நகரமான மஷாட்டில் (Mashhad) அடக்கத்துடன் நிறைவடையும்.
