தாய்லாந்தில் பௌத்தத் துறவிகள் கலந்துகொண்டிருந்த ஊர்வலத்தில் 11 வயதுடைய சிறுவன் செலுத்திய கெப் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தாய்லாந்தின் முக்டாஹான் மாநிலத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில், 35 பௌத்தத் துறவிகளும் ஐந்து பக்தர்களும் இணைந்து ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கெப்ரக வாகனம் கூட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் ஐந்து துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி மேலும் மூவர் உயிரிழக்கவே பலி எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த 11 வயதுடைய சிறுவன் பெற்றோரின் அனுமதியின்றி வாகனத்தை செலுத்தியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாகனத்தை செலுத்தும்போது அது கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே, விபத்துக்குள்ளான வாகனம் தடயவியல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
