06 மணிநேர போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா முன்மொழிவு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே சமீபகாலமாக மோதல் வலுத்து வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 06 மணிநேர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக அவர் இந்த போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு உக்ரைன் இன்று நண்பகல் பதிலளிக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கு டொன்பாஸில் உள்ள மிக முக்கியமான தளவாட மற்றும் பாதுகாப்பு மையங்களில் ஒன்றான கான்ஸ்டான்டினோவ்காவில் உடல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்வுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை கான்ஸ்டான்டினோவ்கா நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் ரஷ்ய ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles