ஈரான் உச்ச தலைவர் கமேனியின் உடல் நல்லடக்கம்

அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் இறுதி அஞ்​சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அயத்​துல்லா அலி கமேனி கடந்த பெப்ர​வரி 28ஆம் திகதி அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய கூட்​டுத் தாக்​குதலில் கொல்​லப்​பட்​டார். அவருடன் அவரது மூத்த மகள், மரு​மகன், மரு​மகள், 14 மாத பேர்த்தி ஆகியோ​ரும் கொல்லப்பட்டனர். போர் தொடர்ந்​த​தால் அவர்​களின் இறு​திச் சடங்கு நடை​பெற​வில்லை.

இந்த சூழலில் போர் பதற்​றம் தணிந்​த காரணத்தால், ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் கமேனி உள்ளிட்ட உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு இறு​திச்​சடங்கு நிகழ்​வு​கள் கடந்த வாரம் தொடங்​கின. அவர்​களின் உடல் பல்​வேறு நகரங்​களுக்கு எடுத்​துச் செல்​லப்​பட்டது.

இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று (ஜூலை 10) ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினை​விடத்​தில் முறைப்​படி அவரது உடலை ஈரான் நல்​லடக்​கம் செய்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles