ஈரானின் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா குண்டுவீச்சு

ஈரானில் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சீர்குலைந்துள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் தாக்குதல் தொடர்கிறது.

இதன்படி நேற்று இரவு ஈரானின் பந்தர் அப்பாஸ், சபாஹர் உள்ளிட்ட துறைமுக நகரங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் ஈரானும் பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்கள் நாட்டை நோக்கி வந்த ட்ரோன், ஏவுகணைகளை இடைமறித்து அளித்ததாக குவைத், பஹ்ரைன் நாடுகள் தெரிவித்து தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் ஈரானின் மிக முக்கிய புஷெஹர் அணுமின் நிலையத்தின் மிக அருகாமையில் அமெரிக்கப் படைகள் குண்டுவீசியுள்ளன.

ஈரான் அரசு ஊடகங்களின்படி, இந்த தாக்குதலின் தாக்கத்தால், புஷெஹர் அணுமின் நிலைய வளாகத்திற்குள் இருக்கும் ஒரு கட்டிடம் பகுதியளவு பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதிர்வீச்சு அபாயம் குறித்த தகவல் வெளியாகவில்லை. அணுமின் நிலையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அணுமின் நிலையம் தவிர, ஈரானின் முக்கிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் துறைமுக நகரங்களான பந்தர் அப்பாஸ் மற்றும் கொனார ஆகிய கடலோரப் பகுதிகளும் அமெரிக்காவின் தொடர் குண்டுவீச்சுகளுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles