ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் நடந்த அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி தெரிவித்தார் .
தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று புதன்கிழமை தங்களது ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஈரான்ஷாஹர் நகருக்கு அருகிலுள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர் என இராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
