ட்ரம்பை விட சீன ஜனாதிபதியை அதிகம் விரும்பும் மக்கள்

பெரும்பாலான இலங்கையர்கள் அமெரிக்காவை விட சீனாவுக்கே அதிக விசுவாசமாக இருப்பதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

36 நாடுகளைக் சேர்ந்த 42,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கருத்து கணிப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பின் இறுதி முடிவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவை விட சீனாவையே விரும்புகின்றன.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உலக மக்களால் அதிகம் நேசிக்கப்படும் தலைவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் 72 சதவீதம் மக்கள் சீனாவுக்கு விசுவாசமாக இருக்கும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் சீனாவின் மீதான ஆதரவு 90 சதவீதமாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles