பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் அன்ரி பர்ன்ஹாம்

பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் அன்ரி பர்ன்ஹாம் நாளைமறுதினம் திங்கட்கிழமை 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக மூத்த தலைவரான என்டி புர்ன்ஹாம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதேவேளை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரே பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள என்டி புர்ன்ஹாம், இதற்கு முன்னதாக ‘கிரேட்டர் மான்செஸ்டர்’ பகுதியின் தலைவராகப் பணியாற்றிப் பரவலான அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles