2026 FIFA உலகக் கிண்ண சம்பியன்களுக்கு வெற்றிக்கிண்ணத்துடன் கூடுதலாக ‘சாம்பியன்ஷிப் மோதிரங்களையும்’ வழங்க கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
உலகக் கிண்ண வரலாற்றில் இவ்வாறு மோதிரம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அதன்படி, இந்த ஆண்டு உலகக் கிண்ண சாம்பியன் அணிக்கு 30 மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
இருப்பினும், மேலும் 1,996 மோதிரங்கள் விளையாட்டு ரசிகர்களுக்கு விற்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதிரங்களின் மொத்த எண்ணிக்கை 2,026 என்பதும் குறிப்பிடத்தக்கது.
