பருத்தித்துறை இளைஞர் வரணி விபத்தில் மரணம்! கண்ணுக்குள் வண்டு புகுந்ததால் நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை, தும்பளை, நெல்லண்டையைச் சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27) என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிட்டிவேரம் அம்மன் ஆலயத்துக்கு அருகில் சென்ற வேளையில் திடீரென வண்டு ஒன்று அவரது கண்ணுக்குள் புகுந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles