
பிஃபா உலகக்கிண்ண கால்பந்து தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் அர்ஜென்ரீனாவை 0 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெய்ன் அணி கிண்ணத்தை வென்றது.
அர்ஜென்ரீனாவை கோல் அடிக்க விடாமல் சாமர்த்தியமாக விளையாடிய ஸ்பெய்ன் அணி ஒரு அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் வீரர்கள் பெரிதும் கவனிக்கப்பட்டாலும், அவர்கள் அனைவரையும் மீறி ஒரு சிறுவன் உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றான்.
ஸ்பெய்ன் நட்சத்திர வீரர் லாமின் யமாலின் 3 வயது குட்டித் தம்பியான கீன் யமால் தான் அது. இத்தொடர் முழுவதும் ஸ்பெயின் அணி விளையாடியப் போட்டிகளில் கவனம் ஈர்த்து வந்த கெய்னே, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வென்றதும் உலகக்கோப்பையுடன் எடுத்த புகைப்படங்கள் உலகெங்கும் வைரலாகியுள்ளது.
போட்டிகள் நடைபெறுகையில், மைதானத்தின் பர்வையாளர் வரிசையில் நின்று ‘வாமோஸ்’ எனக் கூச்சலிடும் கீன், அவ்வப்போது செய்யும் சேட்டைகள், வேடிக்கையான முகபாவனைகள், நாக்கை வெளியே நீட்டுவது என மைதானத்தின் பெரிய திரைகளில் அடிக்கடி இடம்பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார்.
லமின் யமாலும் ஆட்டத்தின்போது அடிக்கடி மைதானத் திரைகளைப் பார்த்து, கீனுக்கு கையசைத்துச் சிரிப்பார்.
ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கீன் யமால் லாமின் யமாலைப் பார்க்க மைதானத்திற்குள் ஓடி வந்தார். பின்னர், மைதானத்தில் கால்பந்து விளையாடுவது, யமாலுடன் உலகக்கோப்பையை கையில் ஏந்தி போஸ் கொடுத்தது, பாதுகாப்பு காவலர்களிடம் தொப்பியை வாங்கி அணிந்தது என அவரது சேட்டைகள் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றன.
லாமின் யமால் தனது தம்பியுடன் மிக நெருங்கிய பாசப் பிணைப்பைக் கொண்டுள்ளார். இதுபற்றி ஒருமுறைப் பேசுகையில், “எனது தம்பிதான் எனக்கு எல்லாம். அவன் எனக்கு ஒரு மகனைப் போல இருக்கிறான். அவனை நான் அளவின்றி நேசிக்கிறேன். என் தம்பி மகிழ்ச்சியாக இருப்பதையும், என் அம்மா அவர் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வதையும் பார்ப்பதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வைரல் சகோதரர்களை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
