கடற்கொள்ளையர்களால் தான்சானியா கப்பல் கடத்தல்

தான்சானியா நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.டி. அசானா’ என்ற வணிக எண்ணெய் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.

இக்கப்பல் ஏமனின் முகல்லா பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, ஆயுதம் தாங்கிய 7 கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் இதைக் கடத்தியுள்ளனர்.

தற்போது இந்தக் கப்பல் புன்ட்லாந்தின் கலுலா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கப்பலில் இருந்த மாலுமிகளின் எண்ணிக்கை, அவர்களின் குடியுரிமை அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. மேலும், சர்வதேச கடற்படைகளோ அல்லது கப்பல் நிர்வாகமோ இது குறித்து இன்னும்உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக சோமாலிய கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் கப்பல் கடத்தப்பட்டிருப்பது கடல் வழிப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles