பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாமிற்கு ஐரோப்பிய தலைவர்கள் உட்பட சர்வதேச தலைவர்களை வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் –
“ஆங்கிலக் கால்வாயின் இருபுறமும் உள்ள மக்களின் வளத்தை அதிகரிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்த பர்ன்ஹாமுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் –
“மக்களின் நலனுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்தவும் , ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுக்கு புதிய வேகத்தை அளிக்கவும் முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதிவோலோடிமிர் ஜெலென்ஸ்கி –
பர்ன்ஹாமிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், சாத்தியமான அனைத்து வழிகளிலும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
