யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கான அனுமதியைக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ்விண்ணப்பத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், பார்வையிடுவதற்கான அனுமதியை இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, திட்டமிட்டபடி நாளை மறுதினம் புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி புதைகுழிப் பகுதிக்குச் சென்று கள நிலவரங்களைப் பார்வையிடவுள்ளனர்.
