செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய குழுவினர்

Group of people gathered around an open excavation trench at an archaeological dig site, under a green shade canopy, with tools in the foreground.

Six adults stand around a rocky excavation site under a yellow-green canopy, talking and examining the area.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது..

அதனை அடுத்து இன்றைய தினம் புதன்கிழமை புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles