பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா?

பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்யவுள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று வியாழக்கிழமை ‘ரொய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

நீதிமன்றத் தண்டனையைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட நிலையிலிருந்து சரணடைவதற்காக தான் தாயகம் திரும்புவதாக ஹசீனா அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் தலைவராகவும், முப்படைத் தலைமைத் தளபதியாகவும் இருக்கும் ஹாபுதீனின் இந்த ராஜினாமா, ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ள தாயக வருகைக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக, உயர் பதவிகளில் அவருக்கு எந்தவொரு ஆதரவாளரும் இல்லாத நிலையை உருவாக்கும்.

2024ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து, அவரது ‘அவாமி லீக்’ கட்சி தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதன் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

ஷஹாபுதீனின் ராஜினாமாவிற்கான காரணத்தை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles