லண்டன் முழுவதும் மின்சார மோட்டார் சைக்கிள்களை நோட்டமிடும் பொலிஸார்

லண்டன் முழுவதும் சட்டவிரோத மின்சார பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளை மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

விதிமுறைகளுக்கு உட்படாத வாகனங்களைக் கண்டறிய, புதிய ‘ரோலிங் றோட்’ சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

‘ஒபரேஷன் லெக்ஸாண்டின் (Operation Lexand) ஒரு பகுதியான இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கையானது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், மற்றும் கைபேசித் திருட்டில், அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதையும், பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதேநேரம் இந்த நடவடிக்கையின் கீழ் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,500இற்கும் மேற்பட்ட சட்டவிரோத மின்சார இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் டோட்டன்ஹாம் கோர்ட் சாலைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 29 மின்சார பைக்குகளும் ஏழு மின்சார ஸ்கூட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகனங்கள் மணிக்கு 15.5 மைல் என்ற சட்டப்பூர்வ வேக வரம்பை மீறுகின்றனவா என்பதை விரைவாக அளவிட, காவல்துறை கையடக்க டைனோஸ்டார் மற்றும் வெங்கர் சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துகிறது. அதிக வேகத்தில் செல்பவை அல்லது முறையான உரிமம் மற்றும் காப்பீடு இல்லாதவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles