“அப்பாதான் முதல் தெரிவு” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜயின் முகன் ஜேசன் சஞ்சய் யூடியூப் நேர்காணல் ஒன்றில், “ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமானால் அதில் முதலில் அப்பாதான் தனது விருப்பத் தேர்வாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது தந்தையான முதல்வர் விஜய் குறித்து பேசியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக மாறியிருக்கிறார் ச. ஜோசப் விஜய். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சிக்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனத் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசியபோது தொகுப்பாளினி டிடி உடன் ஜேசன் சஞ்சய் பேசினார். அதில் அவரிடம், “ஹாலிவுட் நடிகர் ஜேசன் உடன் தமிழ்நாட்டு ஹூரோவை யாரை நடிக்க வைக்கலாம்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜேசன் சஞ்சய், “என்னுடைய முதல் தேர்வு அப்பாதான். காம்பினேஷன் நன்றாக இருக்கும்” என்றார். சமீபத்தில் அவருக்கும் அவரது தந்தையான விஜய்க்கும் சண்டை என்பதுபோல் பலர் புரளியைக் கிளப்பி வந்தார்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தப் பேட்டி அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் விஜய் ஆதரவாளர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles