புதிய கருத்துக் கணிப்பில் டிரம்ப் அரசுக்கு பின்னடைவு!

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

அமெரிக்க மக்களில் சுமார் 60 சதவீதத்தினர் அதிபர் டிரம்ப் போருக்குச் செல்ல எடுத்த முடிவை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களில் 60 சதவீதத்தினர் அதிபரின் இந்த முடிவுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனினும், ஒட்டுமொத்த அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் தமது எதிர்ப்பை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பில் வெளிவந்த மற்றொரு மிக முக்கிய அம்சம், ‘போர் மற்றும் பயங்கரவாத விவகாரங்களை எந்தக் கட்சி சிறப்பான முறையில் கையாள்கிறது?’ என்ற கேள்வியாகும்.

2024ஆம் ஆண்டில் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, குடியரசுக் கட்சியே இதனைச் சிறப்பாகக் கையாளும் என 10 சதவீதத்திற்கும் அதிகமான பெரும்பான்மை மக்கள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை நடத்தப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பில், 38% மக்கள் ஜனநாயகக் கட்சியும், 37% மக்கள் குடியரசுக் கட்சியும் இதனைச் சிறப்பாகக் கையாளும் எனக் கூறியுள்ளனர்.

குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு, போர் மற்றும் பயங்கரவாதம் போன்ற விவகாரங்களில் வாக்காளர்களின் பார்வை பெருமளவில் மாறியுள்ளதை இந்தத் தரவு காட்டுகிறது.

வரவிருக்கும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலை நோக்கியுள்ள அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சிக்கு இந்தக் புள்ளிவிவரங்கள் பெரும் பின்னடைவாகவும் கடுமையான சவாலாகவும் பார்க்கப்படுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles