மார்வெல் ஸ்டூடியோஸின் ஸ்பைடர் மான்: பிராண்ட் நியூ டே படம் உலகளவில் ரூ. 13,500 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஸ்பைடர்மான் : பிராண்ட் நியூ டே திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 31 ஆம் தேதியில் வெளியானது. ஆனால், சிறப்புக் காட்சியாக இந்தியாவில் ஜூலை 30 ஆம் திகதியே வெளியானது.
மார்வெல்லின் 38ஆவது திரைப்படமாகவும், எம்.சி.யூவின் ஸ்பைடர்மான் சீரியஸின் 4ஆவது படமாகவும் வெளியாகியிருக்கும் ஸ்பைடர்மான்: பிராண்ட் நியூ டே படம், 225 மில்லியன் டொலர் செலவில் (சுமார் ரூ. 2,146 கோடி) உருவாக்கப்பட்டது.
ஸ்பைடர்மான்: பிராண்ட் நியூ டே, இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ. 72.44 கோடி வசூலித்து, இந்தியாவில் முதல் நாளிலேயே அதிகம் வசூலித்த முதல் ஹாலிவூட் படம் என்ற சாதனை படைத்தது.
இந்த நிலையில், இந்தியாவில் வெளியான 9 நாள்களிலேயே ரூ. 418 கோடிக்குமேல் இப்படம் வசூலித்துள்ளதாகவும், உலகளவில் ரூ. 13,500 கோடி ($1.25 பில்லியன் டொலருக்கும் மேல்) வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்னும் சில நாள்களிலேயே ரூ. 15,000 கோடி வசூலித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, படத்தில் நடித்துள்ள டாம் ஹாலண்ட் – ஜெண்டாயாவுக்கு இங்கிலாந்தில் திருமணமும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. நீண்டகாலமாகக் காதலித்து வந்த இருவரும், தங்களின் திருமணத்தை குறைவான விருந்தினர்களுடன் ரகசியமாக நடத்தியுள்ளனர்.
