ரஷ்யாவின் நிஷ்னிகாம்ஸ்க் நகரில் உள்ள தொழில் மற்றும் பொது சொத்துக்களை இலக்காகக் கொண்டு உக்ரைன் இன்று திங்கட்கிழமை பெரிய அளவிலான டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் பலியாகினர். மேலும் 39 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தகவலை தாதர்ஸ்தான் பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவின் எண்ணெய் ஆலைகளை இலக்கு வைத்து உக்ரைன் தினமும் நீண்ட தூர டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்கள் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவின் சுத்திகரிப்பு திறனைக் குறைத்து, அந்நாட்டு மக்களைப் பதற்றமடைய செய்துள்ளது. நிஷ்னிகாம்ஸ்க் நகரம் உக்ரைன் எல்லையில் இருந்து கிழக்கே சுமார் 1,200 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.
இதன் மக்கள் தொகை சுமார் 2,40,000 ஆகும். இந்த நகரம் ஒரு முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு மையமாகும். இதில் இரண்டு சுத்திகரிப்பு ஆலைகளும் ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலையும் உள்ளன.
