ரஷ்யக் கப்பல்களை பறிமுதல் செய்தால் பதிலடி – ஐரோப்பாவுக்கு புடின் எச்சரிக்கை

ரஷ்யாவின் வர்த்தகக் கப்பல்களை ஐரோப்பிய நாடுகள் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷ்யாவும் அதே வழியில் பதிலடி (tit-for-tat response) கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று புதன்கிழமை எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவின் நிழற்படை (shadow fleet) கப்பல்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வரும் நிலையிலேயே, புடின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மீது தடைகளை விரிவாக்கியுள்ளதுடன், சில கப்பல்களையும் அவற்றின் ஊழியர்களையும் சோதனைக்காகத் தடுத்து நிறுத்தியுள்ளது.

தடைகளை மீறும் சந்தேகத்திற்குரிய கப்பல்கள் மீது கடுமையான கடல்சார் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சில ஐரோப்பிய அரசாங்கங்கள் பரிசீலித்து வருகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் ,

“நேட்டோ அமைப்பு இந்த பிராந்தியத்திற்குள் ஊடுருவி வருகிறது; புதிய ராணுவ – அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய ஆயுத அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன அல்லது வரிசைப்படுத்தப்பட உள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles