புகலிடக் கோரிக்கையாளர்களை தங்கவைப்பதற்கான திட்டம் பிரிட்டன் பிரதமரால் முன்வைப்பு

ஒக்ஸ்ஃபோர்ட்ஷையர் கிராமத்திற்கு அருகில் 1,200 புலம்பெயர்ந்தோரை குடியமர்த்தும் திட்டங்களை பிரதமர் அண்டி பர்ன்ஹாம் முன்வைத்துள்ள நிலையில், அதனை ஆதரித்து தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் புகலிடம் கோருவோரைப் பகிர்ந்தளிப்பதற்கு ஒரு ‘நியாயமான மற்றும் சமமான அமைப்பு’ இருக்க வேண்டும் என்று அன்னா டர்லி (Anna Turley) இன்று தெரிவித்துள்ளார்.

மேலும், புலம்பெயர்ந்தோருக்கு வீடுகளை வழங்குவதில் செல்வந்தப் பகுதிகள் ‘தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்’ என்ற அண்டி பர்ன்ஹாமின் வலியுறுத்தலையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிடிங்டனுக்கு அருகில் புலம்பெயர்ந்தோர் முகாம் அமைப்பது குறித்த விவாதிக்கப்பட்டபோது பிரதமர் இந்த கூற்றை தெரிவித்தார்.

ஒக்ஸ்ஃபோர்ட்ஷையரின் பைசெஸ்டரில் உள்ள ஒரு முன்னாள் இராணுவத் தளத்தில் 1,250 ஆண் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க பரிசீலிக்கப்பட்டது.

இதற்கு ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டதுடன், அவர்களை பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு ஆதரவாக அடையாளப் பொது வாக்கெடுப்பை நடத்த வாக்களித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே பிரதமர் புகலிடக் கோரிக்கையாளர்களை பாகுப்பாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பில் அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles