பிரித்தானியாவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயம்

பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸில் உள்ள லூயிஸ் அருகே, சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்ற சதர்ன் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லண்டன் விக்டோரியாவிலிருந்து ஈஸ்ட்போர்ன் நோக்கிச் சென்ற நிலையில் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதில் 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பலத்த காயங்களுடன் வேறொரு சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணத்தை புலனாய்வாளர்கள் கண்டறியும் வரை, ஹேவர்ட்ஸ் ஹீத் மற்றும் லூயிஸ் இடையேயான ரயில் பாதை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles