கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ் அமோக வெற்றி!

பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ் Nigel Farage வெற்றிப் பெற்று அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் அவர் 44.37 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

அதேநேரம் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எசெக்ஸ் காவல்துறை தன்னை விலகியிருக்குமா அறிவுறுத்தியதாக ஃபாரேஜ் தெரிவித்துள்ளார்.

இருப்பினம் ஃபாரேஜின் கூற்றை மறுத்துள்ள காவல்துறை எந்த வேட்பாளரும் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படவில்லை என்றும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறியது.

கிரிப்டோகரன்சி அதிபரிடமிருந்து அறிவிக்கப்படாத £5 மில்லியன் நன்கொடை தொடர்பான விசாரணைகள் காரணமாக ஃபாரேஜ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

அத்துடன் தற்போது அவர் வெற்றிப் பெற்றுள்ளதன் காரணமாக தர நிர்ணய விசாரணைகள் மீளவும் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles