இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் நாளை (15) கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

கொத்தளத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த இருக்கிறார்.

மேலும், தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவு கூறும் விதமாக, செங்கோட்டையில் நடக்கும் நிகழ்ச்சியின் போது, முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், விஐபிக்கள் மற்றும் பிரபலங்களும் ஒரே இடத்தில் கூட உள்ளனர்.

இந்த நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த டெல்லியில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லிக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல, பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles