இலங்கைக் கடற்படையின் டோரா படகு விபத்து – 11 பேர் மீட்பு

மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பரப்பில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான டோரா ரக படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய 12 பேரில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட 11 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்துக்குள்ளான படகை கண்காணிப்பதற்கும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்கும் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ.17 ரக விமானம் மற்றும் பெல் 412 ரக விமானம் ஆகியன குறித்த கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles