டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி

சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் 13ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் நாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் டில்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சுதந்திர தின விழாவையொட்டி, டில்லி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்புடன், செய்யறிவு தொழில்நுட்ப வீடியோ பகுப்பாய்வு வசதி கொண்ட ஆயிரம் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டில்லி செங்கோட்டை வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மோடியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர், முப்படை மற்றும் டில்லி காவல்துறை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில், டில்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 13 ஆவது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். தேசிய கொடி ஏற்றப்பட்டதும் தேசிய கீதம இசைக்கப்பட்டது. இந்திய விமான படை சார்பில் தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. முப்படை ராணுவ வீரர்களும் அணிவகுத்து சென்றனர்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து பேசி வருகிறார். நாட்டின் கனவுகளும் லட்சியங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

அந்த கனவுகளை நனவாக்குவதற்கான உறுதியுடனும் வலுவாகவும் இருக்க வேண்டும். வலுமான மன உறுதியே, சாவல்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியில் நாட்டிற்கான வழியைக் கண்டறியும் திறனை வழங்குகிறது. 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் வலுவான உறுதியுடன், புதிய உயரங்களை எட்ட வேண்டும். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு வளர்ந்த நாடாக வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles