


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான வாயில் இராஜ கோபுரத்திற்கான கலசாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது
இன்று அதிகாலை முதல் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து முருகப்பெருமான வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி வீதியுலா வந்தையடுத்து இராஜகோபுரத்துக்கான மகா கலசாபிஷேகம் இடம்பெற்றது.
இன்றைய இந்த நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நான்காம் இரகுநாத மாப்பாண முதலியாரல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு இன்றும் 11ஆவது தேவஸ்தான நிர்வாகியால் புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்று கலசாபிஷேகம் இடம்பெற்றது.
