ட்ரம்ப் தனது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டும் – ஈரான் எம்.பி. அறிவுரை

ஹோர்முஸ் நீரிணை தொடர்​பாக வீணான சவால்களை விடுப்​ப​தற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த பாது​காப்​பில் கவனம் செலுத்த வேண்​டும் என்று ஈரான் எம்.பி. இப்​ராஹிம் அசிசி அறி​வுரை வழங்கி​ உள்​ளார்.

சமீபத்​தில் நியூ​யோர்க்​கில் நடை​பெற்ற கூட்​டத்​தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போரில் ஈரானை வீழ்த்​திய பிறகு உலகள​வில் கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு போக்​கு​வரத்​துக்கு மிக​வும் முக்​கிய​மாக விளங்​கும் ஹோர்முஸ் நீரிணைiய அமெரிக்​கா​வின் பிராந்​தி​யப் பகு​தி​யாக அறி​விப்​பேன் என்று பேசி​னார். அமெரிக்​க கடற்​படை அப்​பகு​தி​யில் முழு முற்​றுகையை ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக​வும் அவர் கருத்து தெரிவித்திருந்​தார்.

ட்ரம்​பின் இந்த சர்ச்​சைக்​குரிய பேச்​சுக்கு ஈரானிய நாடாளுமன்றத்​தின் தேசிய பாது​காப்பு மற்​றும் வெளி​யுறவுக் கொள்​கைக் குழு​வின் தலை​வ​ரான இப்​ராஹிம் அசிசி எக்ஸ் தளத்தில் பதிலளித்​துள்​ளார்.

அதில், “ஹோர்முஸ் நீரிணை குறித்து ஓயாமல் வீண் சவால்​களை விடுப்​பதை விட்​டு​விட்​டு, மீண்​டும் உணவுப்​பொருள் வாக​னத்​தில் ஒளிந்​து​கொள்​ளும் நிலைமை வராமல் ட்ரம்ப் தனது சொந்​தப் பாது​காப்​பில் கவனம் செலுத்​து​வது அவருக்கு நல்​லது” என்று தெரி​வித்​துள்​ளார்.

கடந்த ஜூலை மாதம் துருக்​கி​யில் நடை​பெற்ற நேட்டோ உச்சி மாநாட்​டின் போது, ஈரானின் தாக்​குதல் அச்​சுறுத்​தல் காரண​மாக உணவுப்​பொருள் கொண்டு செல்​லும் வாக​னத்​தில் ட்ரம்ப் ரகசியமாக அழைத்​துச் செல்​லப்​பட்டு வேறு விமானத்​துக்கு மாற்றப்​பட்​ட​தாக தகவல்​கள் வெளி​யானது குறிப்​பிடத்​தக்​கது. அதை குறிப்​பிட்​டுத்​தான் இப்​ராஹிம் இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

மேலும், இந்த விவ​காரம் குறித்து ஈரானின் வெளி​யுறவுத் துறை துணை அமைச்​சர் காசிம் கரீ​பா​பாடி கூறும்​போது, “ஹோர்முஸ் நீரிணையை ஒரு எக்ஸ் பதி​வாலோ, போர்க் கப்​பல்​களாலோ அல்லது தேர்​தல் பிரச்​சா​ர பேச்​சுகளாலோ கைப்​பற்​றி​விட முடியாது. ஈரானை இராணுவ பலத்​தைக் காட்டி அச்​சுறுத்த முடியாது” என்று திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்​கப் பகு​தி​யாக அறி​விப்​பது குறித்து ட்ரம்ப் பேசி​யமை ஒரு நகைச்​சுவைக்​காகவே தவிர தீவிர​மான கருத்து அல்ல என்று வெள்​ளை மாளி​கை அதிகாரி ஒரு​வர்​ விளக்​கமளித்​துள்​ளார்​.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles