லண்டனில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் பெரும் தீ விபத்து

தென்கிழக்கு லண்டனின் டெப்ட்ஃபோர்டில் Deptford கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 100 தீயணைப்பு வீரர்களும் 15 தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

லேண்ட்மேன் வேயில் உள்ள ஒரு மறுசுழற்சி நிலையத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புக் குழுவினர், தீயை அணைப்பதற்காக உயரமான சுழலும் ஏணிகளை நீர் கோபுரங்களாகப் பயன்படுத்தினர். இதனால் அந்த நிலையம் கடுமையாகச் சேதமடைந்தது.

அதிகப்படியான புகை காரணமாக, அப்பகுதி மக்கள் தங்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதே நேரத்தில், லண்டன் பிரிட்ஜிற்குச் செல்லும் ரயில் பாதைகள் மூடப்பட்டன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles