கனேடிய பிரதமர் கார்னியின் அதிரடி அறிவிப்பு ; ட்ரம்பிற்கு ‘செக் ‘ வைத்த கனடா

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கனடாவின் பதிலடி வரி, எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள், காகிதம் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கே, பதிலடி வரிகள் விதிக்கப்படவுள்ளன.

இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டப் பல நாட்களாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அமெரிக்காவின் நியாயமற்ற நிபந்தனைகளால் உடன்பாடு எட்டப்படவில்லை.

அமெரிக்கா அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதோடு, மிகக் குறைவாகவே வழங்குகிறது என்று சுட்டிக்காட்டிய மார்க் கார்னி, “நாங்கள் தாக்கப்பட்ட பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்; என்று கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles