ஓராண்டுக்குப் பின் ஹரியும் மேகனும் கனடா திரும்பக்கூடும் : அரண்மனை வட்டாரம் தகவல்

ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணான மேகனை திருமணம் செய்ததிலிருந்தே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கத் துவங்கினார்.

திடீரென ஒருநாள் தானும் மேகனும் ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஹரி.

அதன் பின் ஹரியும் மேகனும் கனடாவுக்குச் சென்றார்கள். அதன் பின் தன் குடும்பத்துடன், தன் மனைவி மேகனுடைய நாடான அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார் ஹரி.

ஆக, எடுத்தோம் கவிழ்த்தோம் என பல முடிவுகளை எடுப்பவர் ஹரி. இந்நிலையில், மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்புவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார் ஹரி!

ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்ப உள்ளதாகவும், ஹரியின் பிள்ளைகள் பிரித்தானியாவில் கல்வி கற்க உள்ளதாகவும், அவர்கள் படிக்கப்போகிற பள்ளி குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஹரியும் மேகனும், ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹரி பிரித்தானியா திரும்பினாலும், அவருக்கு ராஜ குடும்பத்தில் பொறுப்புகள் கொடுக்கப்படப்போவதில்லை என்றே கருதப்படுகிறது.

அப்படியிருக்கும் பட்சத்தில், ஹரி எப்போது வேண்டுமானால் மீண்டும் கனடாவுக்கோ அல்லது அவுஸ்திரேலியாவுக்கோ திரும்பலாம் என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.

சிக்கல் என்னவென்றால், ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சிக்கும் லிலிபெட்டுக்கும் பள்ளி துவங்கும் நேரம் வந்துவிட்டது.

ஆக, பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தபின் ஹரியும் மேகனும் தாங்கள் விரும்பிய நாட்டுக்குச் செல்வது குறித்து எப்படி முடிவெடுப்பார்கள் என்பதுதான் புரியவில்லை!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles