கனடா மீது ட்ரம்ப் நிர்வாகம் கூடுதல் வரிகளை விதித்துள்ள நிலையில், ஒட்டாவா இன்று பதில் நடவடிக்கையை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்காவின் தீர்வைகளுக்கு ஈடாக டொலருக்கு டொலர் என்ற விகிதத்தில் தீர்வைகளை விதிக்கும் போக்கிலிருந்து ஒட்டாவா விலகி, அதற்குப் பதிலாக கனடிய தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேலும் இலக்கு வைக்கப்பட்ட பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும்” என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ள நிலையில் புதிய அறிவிப்புகள் வரவுள்ளளன.
கனடிய வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீது 50 சதவீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
