அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீடிக்க வேண்டாம் எனக் கோரி, சமூக ஆர்வலர்கள் குழுவொன்று இன்று (25) ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனுவொன்றை கையளித்துள்ளது.
பொதுமக்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனுவில், சுரேஷ் சலேவின் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் ஐஷ்சர்யா குணரத்ன, சர்வதேச அழுத்தம் காரணமாக சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீளப் பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.
