கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள சட்பரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து ஓகஸ்ட் 22ஆம் திகதி மாலை 4 மணியளவில், நொட்ரே டேம் பகுதியில் இடம்பெற்றதாக சட்பரி பொலிஸார் ஓகஸ்ட் 24ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நெட்ரே டேம் மற்றும் லாசேல் போல்வொர்ட் சந்திப்புக்கு வடக்கே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தெற்கு நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று திடீரென வடக்கு நோக்கிய பாதைக்குள் நுழைந்து, எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியுள்ளது.
தெற்கு நோக்கிப் பயணித்த வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே வாகனத்தில் பயணித்த இளம் பயணி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும், வடக்கு நோக்கிப் பயணித்த வாகனத்தில் இருந்த சாரதியும் பயணியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
