பிரெக்ஸிட்டால் பிரித்தானியாவுக்கு 11.7 பில்லியன் பவுண்ஸ்கள் இழப்பு

பிரெக்ஸிட் காரணமாக இங்கிலாந்துக்கு ஆண்டுதோறும் 11.7 பில்லியன் பவுண்ஸ்கள் ஏற்றுமதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 400 பவுண்ஸூகளுக்குச் சமமாகும்.

2016ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தின் சரக்கு ஏற்றுமதி 20.7 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி அளவு 15.9 சதவீதம் சரிந்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய இயக்கம் யுகே (European Movement UK) நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 72.8 சதவீத வணிகங்கள் பிரெக்ஸிட்டினால் எதிர்மறையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 98.2 சதவீதம் பேர் ஒற்றைச் சந்தைக்குத் திரும்புவதை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே வர்த்தகக் குழுக்களும் அரசியல்வாதிகளும், ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுடன் இன்னும் நெருக்கமாக இணங்குவதன் மூலம் தேவையற்ற நிர்வாகத் தடைகளைக் குறைக்கவும், எல்லைச் சிக்கல்களைக் குறைக்கவும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles