நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 626ஆக உயர்வு!

நேபாள பெருவெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியர்கள் உள்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 2000இற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை 626 பலியாகினர் என நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக இன்று (ஓக. 29) அறிவித்துள்ளது.

தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீட்பு ஆணையத்தின் (NDRRMA) தகவலின்படி, சிட்வானில் 233 உடல்களும், நவல்பராசி கிழக்கில் 158 உடல்களும், நுவாகோட்டில் 51 உடல்களும், கோர்காவில் 48 உடல்களும், நவல்பராசி மேற்கில் 47 உடல்களும், தாடிங்கில் 45 உடல்களும், தனாஹுவில் 31 உடல்களும் மற்றும் ரசுவாவில் 13 உடல்களும் மீட்கப்பட்டன என்பது தெரிய வந்துள்ளது.

இந்தப் பெருவெள்ளத்தில் 320 இந்தியா்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை என்றும் சீனப் பகுதியில் சுமார் 400 இந்தியா்கள் தவித்து வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles