மருந்து விசிறப்பட்ட வாழைகுலைகளை விற்கமுயன்றவருக்கு 6 மாத சிறை!

ஆலய அன்னதானத்துக்கு வழங்குவதற்காகக் காலாவதியாகிய மருந்து விசிறப்பட்ட வாழைக் குலைகளை விற்பனை செய்ய முற்பட்டவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், ரூபா ஐயாயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் வடமராட்சிப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமொன்றின் திருவிழா காலத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் வழங்குவதற்கென நீர்வேலிப் பகுதியில் மருந்து விசிறப்பட்ட நிலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த 424 கிலோ வாழைக்குலைகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். உதயபாலா தலைமையிலான குழுவினர் அதிரடியாகப் பிடித்திருந்தனர்.

மருந்து விசிறப்பட்ட வாழைக்குலைகள் கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் கையகப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைக்கப்பட்டன.

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய – சுமார் ஒரு வருடம் காலாவதியாகிய பழங்களைப் பழுக்கச் செய்யும் மருந்து பழங்களுக்கு விசிறப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீர்வேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு யாழ். மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி என். உசைன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஆறுமாத கால சிறைத் தண்டனையும், ரூபா ஐயாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles