அமெரிக்காவில் 3 கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு!

அமெரிக்காவில் மூன்று கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பின் உடலிலிருந்து அந்த பந்துகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த 22ஆம் திகதி கோல்ஃப் பந்துகளை விழுங்கிவிட்ட பாம்பு ஒன்று அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் பாதுகாப்பாக வெளியே எடுக்கும் முயற்சியில் கால்நடை மருத்துவர்கள் இறங்கினர்.

பின்னர் மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் பாம்பின் உடலிலிருந்து அந்த மூன்று கோல்ஃப் பந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே எடுத்தனர். இச்சிகிச்சையின் போது அந்தப் பாம்பிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும், இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனை கூறுகையில், இது நிச்சயமாக ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒருவேளை முட்டை என நினைத்து பாம்பு அந்த பந்துகளை விழுங்கியிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles