மறைந்த நோர்வே மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் புகழஞ்சலி

நோர்வேயின் மறைந்த மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. நோர்வே நாட்டிற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தமைக்காக அந்நாட்டு மக்கள் அவருக்கு ஆழ்ந்த நன்றியுணர்வுடன் உள்ளனர்” என்று நோர்வே பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மன்னராக இருந்த ஹரால்ட், நோர்வே மக்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். நம்மிடமும், நமக்கு இடையிலும் உள்ள சிறந்த பண்புகளைக் கண்டறிய அவர் நமக்கு உதவினார்” என்றும் அவர் கூறினார்.

“மன்னர் ஹரால்ட் கண்ணியம், ஞானம் மற்றும் தனது நாட்டிற்கான அசையாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவமாகத் திகழ்ந்தார்” என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும், ஷ்யாவின் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட இருண்ட நாட்களில் அவர் அளித்த உறுதியான ஆதரவையும் ஒற்றுமையையும் உக்ரைன் என்றும் நினைவில் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“விவேகத்திற்கும் ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒரு மாபெரும் தலைவரை நோர்வே இழந்துள்ளது” என ஜெர்மனி சேன்சலர் பிரீட்ரிச் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் தலைவராக அவர் ஆற்றிய நீண்டகால மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவை, அனைத்துத் தரப்பு நோர்வே மக்களையும் ஒன்றிணைக்கும்.

எக்காலத்திலும் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் பேணுவதில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக மன்னர் ஹரால்ட் என்றும் நினைவுகூரப்படுவார்” என பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles