திருமலையில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இளைஞர் பலி!

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம், பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமம் பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள திருகோணமலை – கண்டி பிரதான வீதியிலேயே இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

மேற்படி இளைஞர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles