நேபாள வெள்ளத்தின் நடுவே விழாமல் நின்ற ஒரே வீடு : குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு

நே​பாளத்​தில் அண்​மை​யில் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் ஏற்​படுத்​திய பேரழி​வு​களும், வெள்​ளத்​தில் வீடு​கள் அடித்​துச் செல்லப்​பட்டு ஏராள​மானோர் உயி​ரிழந்த கொடூரக் காட்​சிகளும் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்​தன.

இருப்​பினும், இந்த இயற்​கைப் பேரிடருக்கு மத்​தி​யிலும் நம்பிக்கையளிக்​கும் ஓர் அதிசய மீட்​புச் சம்​பவம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளது. வெள்​ளத்​தில் மற்ற அனைத்துக்கட்டடங்​களும் அடித்​துச் செல்​லப்​பட்ட நிலை​யில், பச்சை நிறம் பூசப்​பட்ட ஒரு வீடு மட்​டும் சீறிப்​பாய்ந்த சேற்று வெள்​ளத்​துக்கு நடுவே அசைக்க முடி​யாமல் நின்ற காட்சி இணையத்​தில் தீயாகப் பரவியது.

வெள்​ளத்​தின் வேகம் சுற்​றி​யிருந்த கட்​டிடங்​களைத் தரைமட்டமாக்கி அடித்​துச் சென்ற போதி​லும், அந்​தப் பச்சை நிற வீடு மட்​டும் வெள்​ளத்​தின் சீற்​றத்​தைத் தாங்கி உறு​தி​யுடன் நின்றது. அந்த வீட்​டுக்​குள் ஒரு குடும்​பமே சிக்​கி​யிருந்​தது தெரியவந்​ததையடுத்​து, உலகெங்​கிலும் உள்ள சமூக வலை​தளப் பயனாளர்​கள் அவர்​களின் பாது​காப்​புக்​காகப் பிரார்த்​தனை செய்​யத் தொடங்​கினர்.

கட்​டடத்​தின் அசாத்​தி​ய​மான உறு​தித்​தன்மை இணை​யத்​தில் பெரிய விவாதப் பொருளாக மாறியது. இவ்​வளவு பெரிய வெள்ளத்தின் சீற்​றத்​தை​யும் தாங்கி இந்த வீடு எவ்​வாறு சேதமடையாமல் நின்​றது? எனப் பலரும் வியப்​புத் தெரி​வித்​தனர்.

இதனிடையே, சமூக வலை​தளப் பயனர் ஒரு​வர் வெளி​யிட்ட மற்றொரு வீடியோ​வில், வீட்​டுக்​குள் சிக்​கி​யிருந்த குடும்​பத்​தினர் அனை​வரும் எவ்​வித ஆபத்​து​மின்றி பத்​திர​மாக மீட்​கப்​பட்ட செய்தி உறுதி செய்​யப்​பட்​டது.

இது லட்​சக்​கணக்​கான நெட்​டிசன்​களுக்​குப் பெரும் நிம்மதியையும் ஆறு​தலை​யும் அளித்​துள்​ளது.

இச்​சம்​பவம் குறித்து இணை​யத்​தில் கருத்து தெரி​வித்​துள்ள பயனர் ஒரு​வர், “அந்த இக்​கட்​டான சூழலில் குடும்​பத்​தினரின் மனநிலை எப்​படி இருந்​திருக்​கும்? இருப்​பினும் இந்​தத் தாக்குதலை​யும் தாங்கி நின்ற அந்த வீடு, தரமான கட்​டிட நிர்மாணத்தின் முக்​கி​யத்​து​வத்​துக்​குச் சிறந்த சான்​று” எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

மற்​றொரு பயனர், “அந்த வீட்​டைப் பலமாக கட்​டிய பொறியாளருக்குப் பா​ராட்​டு​கள்; கடவுளின் அருளால் குடும்பத்தினர் உயிர் தப்​பியது மகிழ்ச்​சி” எனப்​ பதி​விட்​டுள்​ளார்​.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles