கிறீஸ் – இஸ்ரேல் இடையே வான்பாதுகாப்பு கொள்வனவு ஒப்பந்தம் கைச்சாத்து

கிறீஸ் நாடு இஸ்ரேலுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துள்ளது.

இதன்படிஇ 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான பன்முகப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பை (air defence system) ஏதென்ஸிற்கு வழங்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

டெல் அவிவ் நகரில் நேற்று திங்கட்கிழமை கையெழுத்தான இந்த ஒப்பந்தம்இ கிரீஸ் தனது ராணுவத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

‘அகில்லெஸ் ஷீல்ட்’ (Achilles Shield) என்று அழைக்கப்படும் இந்த வான் பாதுகாப்புத் திட்டத்திற்காக கிரீஸ் 2036 ஆம் ஆண்டுக்குள் சுமார் 28 பில்லியன் யூரோக்களைச் செலவிட திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்குள், அமெரிக்காவிடம் இருந்து எப்-35 போர் விமானங்களையும், பிரான்ஸ் மற்றும் இத்தாலியிடமிருந்து போர்க் கப்பல்களையும் வாங்குவதும் அடங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles