ஈரானில் ஆயுதப்படைகளின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கார் புகுந்து மோதியதில் நால்வர் பலி!

ஈரான் அரசாங்கம் மற்றும் ஆயுதப் படைகளின் ஆதரவாளர்கள் கூடியிருந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்து மோதியதில் குறைந்தது 04 பேர் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.

ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹத்தில், நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக சென்ற கார் ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து, பின்னர் பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் போக்குவரத்துச் சிக்னல்களில் மோதிய பிறகு கூட்டத்திற்குள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும்போது அவர் இயல்பான நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் அரசியல் நோக்கம் இருந்ததற்கான உடனடி அறிகுறி எதுவும் இல்லை, மேலும் அதிகாரிகள் இந்தச் சம்பவத்தை ஒரு சாலை விபத்து என்று விவரித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles