கார்க் தீவுக்கு அருகே ஈரான் எண்ணெய் கப்பல்மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே, வளைகுடாப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக ஈரானின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கார்க் தீவின் நங்கூரமிடும் பகுதியில் இருந்த கப்பல் மீது அமெரிக்காவின் நான்கு ஏவுகணைகள் பாய்ந்து தாக்கியதாக கார்க்கில் உள்ள தஸ்னீம் நிருபர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும் உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தஸ்னீம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரானிய அதிகாரிகளிடமிருந்து உடனடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேபோல், அமெரிக்க மத்திய கட்டளையகமும் (U.S. Central Command) கருத்து கேட்கப்பட்டதற்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

முன்னதாக ஓகஸ்ட் 31 அன்று, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றுடன் கூடிய தனது சமூக ஊடகப் பதிவில், கார்க் தீவு “தரைமட்டமாக்கப்படும்” என்று அமெரிக்க டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

கார்க் தீவு தாக்கப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய அதிகாரிகளும் சபதம் ஏற்றிருந்தனர்.

பெட்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக ஈரான் திகழ்கிறது.

போருக்கு முன்னர் ஈரான் தனது கச்சா எண்ணெயில் 90 சதவீதத்தை கார்க் தீவு வழியாகவே ஏற்றுமதி செய்தது. ஆனால், ஏப்ரல் பாதியில் அமெரிக்கா விதித்த ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி முற்றுகைக்குப் பிறகு இந்த விநியோகம் தடைபட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles