தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த 11 இலங்கை அகதிகள் கடற்படையினரால் மீட்பு

A family standing side by side outside against a white wall; man in red holds a toddler, others in colorful dresses and shirts.

தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டொன்றில் தவித்துக் கொண்டிருந்த வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களின் அகதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சனிக்கிழமை பிற்பகல் அங்கிருந்த மேலும் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மீட்கப்பட்டவர்களில் தந்தை ஒருவரும் அவரது 11 மற்றும் 13 வயதுடைய இரு பிள்ளைகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்துள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 11 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால், அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் வழியாக வந்துள்ளதாகவும், இவர்கள் முன்னர் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்களை அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles