கனடாவில் நடைபாதையில் சென்ற பெண் கார் மோதியதில் மரணம்

கனடாவின் ரொறன்ரோ நகரின் மையப்பகுதியில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த 37 வயதுடைய பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ரொறன்ரோ காவல்துறை சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவரங்களைத் தெரிவித்துள்ளது.

பாத்தர்ஸ்ட் தெருவில் வடக்கே நோக்கி வெள்ளை நிற நிசான் பாத்ஃபைண்டர் காரை 18 வயது இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

லான்ஸ்மவுண்ட் டிரைவ் அருகே சென்றபோது கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையின் மீது ஏறியுள்ளது. அப்போது கிழக்கு நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த அப்பெண்ணின் மீது கார் பலமாக மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய 18 வயது இளைஞரைச் சனிக்கிழமையன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் மீது உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எதிர் வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி ரொறன்ரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles