தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுச் சின்னமாக மாறியுள்ள மினாப் பாடசாலை

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஆரம்பமான பெப்ரவரி 28ஆம் திகதி, தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜரேஹ் தய்யிபெஹ் (Shajareh Tayyebeh) பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர் என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தாக்குதலுக்குப் பின்னர் மூடப்பட்டிருந்த அந்தப் பாடசாலை தற்போது மாணவர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் நினைவிடமாக உருவெடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பின்னர் வேறுபட்ட எண்ணிக்கைகள் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்குப் பின்னர் மூடப்பட்டிருந்த அந்தப் பாடசாலை தற்போது மாணவர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் போர் நினைவிடமாக உருவெடுத்துள்ளது.

கடுமையாக சேதமடைந்த பாடசாலைக் கட்டிடத்தின் வகுப்பறைகள் இடிபாடுகளுடன் காணப்படும் நிலையில், உயிரிழந்த மாணவர்களின் புகைப்படங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

செப்ரெம்பர் 5ஆம் திகதி அங்கு சென்றிருந்த பத்திரிகையாளர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அமைதியாக அஞ்சலி செலுத்தியதைப் பதிவு செய்துள்ளனர்.

பாடசாலையின் இடிபாடுகள் தற்போது அந்தத் தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்களின் நினைவுச் சின்னமாக மாறியுள்ளன.

“இந்தப் பாடசாலை இனி இயங்காது” எனத் தெரிவித்த ஹோர்மோஸ்கான் மாகாண ஆளுநர் முகமது அஷூரி தாசியானி, கட்டிடத்தை போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகத் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் குறைந்தது ஒரு அமெரிக்க ஏவுகணை பாடசாலையைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாடசாலைக்கு அருகில் உயிரிழந்தவர்களுக்காக தனியான கல்லறைப் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளதுடன், குடும்பத்தினர் அங்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles